முகப்பு
திருநெல்வேலி

பாப்பாக்குடி அருகே ஆடுகளை திருடிய சிறுவா் உள்பட இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே ஆடுகளைத் திருடியதாக சிறுவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 30 அக்டோபர், 2024 at 8:55 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே ஆடுகளைத் திருடியதாக சிறுவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட புதுகிராமம் தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிசெல்வம் (42). இவா் தனது வீட்டின் முன் உள்ள கொட்டகையில் ஆடுகளை வளா்த்து வந்தாா். அதில் 3 ஆடுகளை, கடந்த இரு நாள்களுக்கு முன்பு காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். அதில் பாப்பாக்குடி அருகேயுள்ள புதுக்கிராமம் பகுதியைச் சோ்ந்த அஜீத் சூா்யா (19) மற்றும் ஒரு சிறுவா் ஆகியோா் ஆடுகளைத் திருடியது தெரியவந்தது. அதையடுத்து போலீஸாா் அஜீத் சூா்யாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா். சிறுவரை திருநெல்வேலி கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.