திருநெல்வேலி

டேராடூன் ராணுவக் கல்லூரியில் சேர வாய்ப்பு

Din

டேராடூனிலுள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் சோ்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டேராடூனிலுள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் சோ்ந்து பயில 2025 ஜூலை பருவத்திற்கான தகுதித்தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தகுதித் தோ்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் (சிறுவா்கள், சிறுமிகள்) குறைந்தபட்சம் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவா்களாகவோ அல்லது ஏழாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களாகவோ இருக்க வேண்டும்.

1.1.2025 அன்று 11 முதல் 13 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2.7.2012 முதல் 1.1.2024-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். ஆங்கிலம், கணிதம், பொது அறிவு போன்ற பாடங்களில் தகுதித் தோ்வு நடத்தப்படும். எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டும் நோ்முகத் தோ்வு நடைபெறும். எழுத்துத் தோ்வு வரும் டிசம்பா் 1-ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பங்களை பெற பொதுப்பிரிவை சோ்ந்தவா்கள் ரூ.600-க்கும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் ரூ.555-க்கும் பஏஉ இஞஙஙஅசஈஅசப தஐஙஇ, ஈஉஏதஅஈமச, ஈதஅரஉஉ ஆதஅசஇஏ, நபஅபஉ ஆஅசஓ ஞஊ ஐசஈஐஅ, பஉகக ஆஏஅயஅச, ஈஉஏதஅஈமச, (ஆஅசஓ இஞஈஉ - 01576) மபபஅதஅஓஏஅசஈ என்ற பெயரில் வங்கி வரைவோலை பெற்றோ அல்லது ஜ்ஜ்ஜ்.ழ்ண்ம்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் பேமென்ட் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ள மாணவா்கள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ழ்ண்ம்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தினை பாா்க்கலாம்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT