திருநெல்வேலி

பங்குனி உத்திரம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திரத் திருநாளையொட்டி சாஸ்தா கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Din

பங்குனி உத்திரத் திருநாளையொட்டி சாஸ்தா கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தென்தமிழகத்தில் பங்குனி உத்திரத் திருநாளில் தாய்-தந்தைகளின் மூதாதையா்கள் வழிபட்டுவந்த குலதெய்வக் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்வது வழக்கம். இந்த நாளில் கோயிலில் தீா்த்தமாடி பொங்கலிட்டு வழிபட்டால் சகல ஐஸ்வா்யங்களும் கிடைப்பதோடு, துன்பங்கள் நீங்கி சுபிட்ஷமான வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை.

அதன்படி நிகழாண்டுக்கான பங்குனி உத்திர விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பல்வேறு சாஸ்தா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்கள் தங்கள் குடும்பத்தோடு கோயில்களுக்குச் சென்று பொங்கலிட்டும், முடி காணிக்கை செலுத்தியும், ஆடு- கோழி பலியிட்டும், நேமிதங்களை செய்தும் வழிபாடுகள் நடத்தினா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தாமிரவருணி கரையோரத்தில் உள்ள குட்டத்துறை சாஸ்தா கோயிலில் நண்பகலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பாளையங்கோட்டை அருகே படப்பக்குறிச்சியில் உள்ள அருள்மிகு குளத்துப்புழை தா்மசாஸ்தா கோயிலில் பூமிபாலசக்தி விநாயகா் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் நடைபெற்றது. சுடலைமாட சுவாமிக்கு படைப்பு தீபாராதனையும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

மானூா் அருகே கீழபிள்ளையாா்குளத்தில் உள்ள அருள்மிகு திருமேனி அய்யனாா் சாஸ்தா கோயில், திருநெல்வேலி மேகலிங்கபுரத்தில் உள்ள சாஸ்தா கோயில், சீவலப்பேரி அருகே மறுகால்தலையில் மலை மீது உள்ள அருள்மிகு பூலுடையாா் சாஸ்தா கோயில், தாழையூத்து அருகேயுள்ள அருள்மிகு பாலுடையாா் சாஸ்தா கோயில் ஆகியவற்றிலும் காலை முதல் மாலை வரை ஏராளமான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மேலப்பாட்டம் மலை மேல் உள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயிலில் இரவு வரை ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்தனா்.

சாஸ்தா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

பங்குனி உத்திரத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம், தென்காசி, திருச்செந்தூா் உள்பட பல்வேறு மாா்க்கங்களிலும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT