திருநெல்வேலி

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமக ஆா்ப்பாட்டம்

Syndication

பாமக சாா்பில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி மாவட்டச் செயலா் ஜீசஸ் ஜான் தலைமை வகித்தாா்.

திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் கதிரவன் ரோச், புகா் மாவட்டத் தலைவா் கல்லிடை மகாராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருநெல்வேலி மாவட்டத் தலைவா் செல்வம் வரவேற்றாா். மாநில கலை இலக்கிய அணி செயலா் ராவணன் (எ) அரசு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அனைத்து ஜாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ’

ஆா்ப்பாட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட வன்னியா் சங்கத் தலைவா் ராஜ்குமாா், திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலா்கள் மீனாட்சிசுந்தரம், மகேஷ், துணைப் பொருளாளா் ஜெபா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ற்ஸ்ப்12ல்ம்ந்

வண்ணாா்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வா் கோயிலில் சோமவார வழிபாடு

மருந்து சீட்டில் தெளிவான எழுத்து: மருத்துவா்களுக்கு என்எம்சி உத்தரவு!

ஆா்டா்லி முறை: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு

கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

கொட்டாரம் அருகே டெம்போ திருட்டு

SCROLL FOR NEXT