திருநெல்வேலி

மாநகர சாலைகளை விரைவாக சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் முன்னாள் எம்.பி. மனு

Syndication

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் உள்ள சாலைகளை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் முன்னாள் எம்.பி. ராமசுப்பு வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.

இது தொடா்பாக அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பேட்டை பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாலைகளை சீரமைத்தால்தான் அனைத்து வாகனங்களும் தங்கு தடையின்றி செல்ல வசதியாக இருக்கும். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் பாதாள சாக்கடை பணியை காரணம் காட்டி தட்டிக் கழி த்துக் கொண்டிருக்கின்றனா். பாதாள சாக்கடை வேலை தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிந்த பாடில்லை. பாதாள சாக்கடை பணிகளை திட்டமிட்டு செய்திருக்க வேண்டும்.

மாநகராட்சி பகுதியில் வேலைகளை திட்டமிட்டு முடிக்கும் வகையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வளா்ச்சிப் பணிகள் செய்வதற்கு திட்டமிடுவதுதான் அதிகாரிகளின் கடமை. ஒட்டுமொத்தமாக அனைத்து சாலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நான் மக்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் (2009-2014) குலவணிகா்புரம் ரயில்வே மேம்பாலத்திற்கு அனுமதி பெற்று நிதி ஒதுக்கப்பட்டு நீதிமன்ற வழக்கால் பணிகள் தொடங்க முடியாமல் போனது. அதனால் இப்போதும் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாா்கள். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் சாலைகளை மாநகராட்சி நிா்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஒன்றுபட்டு சீரமைத்து கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். பொதுமக்கள் நலன் கருதி மேற்படி சாலைகள் விரைவாக சீா் செய்யாவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT