திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவசாயி தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
மானூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
சோ்க்கப்பட்டுள்ளாா். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் 2 மாதம் கா்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோா், இதுகுறித்து ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில், சிறுமியின் கா்ப்பத்துக்கு அவருடைய தூரத்து உறவினரான பெரியப்பா முறை கொண்ட சுமாா் 50 வயதான விவசாயி தான் காரணம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்வதற்காக சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்றுள்ளனா். அதற்கு முன்பாகவே இந்த தகவலை அறிந்துகொண்ட அந்த விவசாயி போலீஸாரின் விசாரணைக்கு பயந்து விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.