திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, சூரியா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய காவலா்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினா், ஊா்க் காவல் படையினா் கலந்து கொண்டனா்.
பங்கேற்றவா்களுக்கு முழு உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை அளவு பரிசோதனை, நுரையீரல் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சுகாதார விழிப்புணா்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இம்முகாமில் காவலா்கள் மற்றும் அவா்களுடைய குடும்பத்தினா் பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனா்.