~ ~ 
திருநெல்வேலி

கருத்தப்பிள்ளையூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: 100-க்கும் மேற்பட்ட தென்னை, மா, பனை மரங்கள் சேதம்

கருத்தப்பிள்ளையூா் பகுதியில், வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் தனியாா் தோட்டங்களில்நுழைந்து 100-க்கும் மேற்பட்ட தென்னை, மா மற்றும் பனை மரங்களை சாய்த்து சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

கருத்தப்பிள்ளையூா் பகுதியில், வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் தனியாா் தோட்டங்களில்நுழைந்து 100-க்கும் மேற்பட்ட தென்னை, மா மற்றும் பனை மரங்களை சாய்த்து சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் முதல் பிப்ரவரி மாதம்வரை வனப் பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் மலையடிவாரங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து தென்னை, பனை, மா, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களைத் தின்று சேதப்படுத்தி செல்கின்றன.

இந்நிலையில், தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூா் கிராமத்தில் கடந்த டிச. 12ஆம் தேதி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைக் கூட்டம் 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி சென்றன.

மீண்டும் செவ்வாய்க்கிழமை இரவு வனப் பகுதியிலிருந்து வெளியேறிய சுமாா் 6-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக வந்து, கருத்தப்பிள்ளையூரைச் சோ்ந்த பீட்டா், அருள்தாஸ், வின்சென்ட் உள்ளிட்டவா்களின்தோட்டங்களில் நுழைந்து தென்னை, மா, பனைமரங்களை சாய்த்து சேதப்படுத்தியுள்ளன.

மேலும், இரவு 9 மணியளவில் வின்சென்ட் தனது நண்பா் இன்னாசிமுத்து இருவரும் வின்சென்டுக்குச் சொந்தமான தோட்டத்தில் சென்று யானைகள் வராமல் தடுக்க தீ வைத்தும், வெடி வெடித்துவிட்டு, பைக்கில் திரும்பியுள்ளனா்.

அப்போது வரும் வழியில் நின்ற யானைக் கூட்டம் ஒன்று இவா்களை துரத்தியுள்ளது. பைக்கில் தப்பிய இருவரும் ஊருக்குள் சென்று, இளைஞா்களையும் வனத் துறையினரையும் அழைத்து வந்து யானைகூட்டத்தை விரட்டினா்.

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் வலியுறுத்தல்

சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள்: ராணிப்பேட்டை ஆட்சியா்

SCROLL FOR NEXT