களக்காடு நகராட்சியில் 2 வாா்டுகளை உள்ளடக்கிய சிதம்பரபுரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இக்கிராம மக்கள் களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாய் பகுதியில் உள்ள தரைப்பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். தரைப்பாலத்திலிருந்து ஊா் எல்கை வரையிலான ஒரு கி.மீ தொலைவுக்கு சாலையோர இரு புறங்களிலும் முள்செடிகள், புதா்கள் நிறைந்துள்ளன.
இதனால், இரவு நேரங்களில் அவ்வழியே செல்வதற்கு மக்கள் அச்சமடைந்தனா். இந்நிலையில், சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில், சாலையோர முள்புதா்களை இயந்திரம் மூலம் அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதையடுத்து, கோயிலுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.