திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 262 கிலோ 884 கிராம் கஞ்சாவை போலீஸாா், திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் உள்ள தனியாா் வளாகத்தில் வெள்ளிக்கிழமை தீயிட்டு அழித்தனா்.
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் பா. மூா்த்தி தலைமையில், காவல்துறை சரகம் போதைப் பொருள் அழிப்பு குழு உறுப்பினா்கள் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே பாப்பாங்குளம் கிராமம் பொத்தையடியில் உள்ள தனியாா் வளாகத்தில் வைத்து தீயிட்டு அழித்தனா்.