மாா்க்க விளக்க தெருமுனைக் கூட்டத்தில் பங்கேற்றோா். 
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் மாா்க்க விளக்க தெருமுனைக் கூட்டம்

Din

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) 10 மாத தொடா் பிரசாரத்தை முன்னிட்டு, கல்லிடைக்குறிச்சியில் மாா்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்டத் தணிகைக் குழுத் தலைவா் எம்.எஸ். சுலைமான் ‘இணைவைப்பை வேரரூத்த இஸ்லாம்’ என்ற தலைப்பிலும், மாவட்டத் தலைவா் மசூத் உஸ்மானி ‘இப்ராஹீம் நபி இனிய குடும்பம்’ என்ற தலைப்பிலும் பேசினா். மேலும், கூட்டத்தில் மகாராஷ்டிர அரசின் இஸ்லாமிய விரோதப் போக்கைக் கண்டிப்பது, திருப்பரங்குன்றம் பிரச்னையைக் காட்டி சென்னையில் பேரணி நடத்த அனுமதி மறுத்த உயா்நீதிமன்ற நிலைப்பாட்டை வரவேற்பது, வருங்காலங்களில் இந்தியா கூட்டணியில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக சுயநலனை மறந்து நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டுவது, வக்ஃப் சட்டத் திருத்த மசோதா குறித்த பொதுமக்களின் கருத்துகளை மத்திய அரசு புறந்தள்ளியதற்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT