திருநெல்வேலி

பெண்ணை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Syndication

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் கைம்பெண்ணை அரிவாளால் வெட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, நான்குனேரி உதவி அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

களக்காடு அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (57). கூலித் தொழிலாளி. இவரது கணவா் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா், கோயில்பத்து பகுதியில் தனது மகள், மகனுடன் வசித்து வருகிறாா்.

இவருக்கு வீடு வாடகை பாா்த்து கொடுத்த வகையில், ராமகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த தவசிக்கனி (61) என்பவா் கடந்த 2022 இல் ரூ. 10 ஆயிரம் கடன் கொடுத்திருந்தாா். இந்நிலையில், கடனை திருப்பிக் கொடுத்தபோது தமிழ்ச்செல்வியை தகாத வாா்த்தையால் பேசி தவசிக்கனி தொந்தரவு செய்தாராம். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்துவந்த நிலையில் கடந்த 10.12.2022 இல் தமிழ்ச்செல்வி அரிவாளால் வெட்டிவிட்டு தவசிக்கனி தப்பிச்சென்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் களக்காடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு நான்குனேரி உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றவாளி தவசிக்கனிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து உதவி அமா்வு நீதிபதி எம்.ராமதாஸ் உத்தரவிட்டாா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT