விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்கள்  
திருநெல்வேலி

விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியின் 15 ஆவது விளையாட்டு விழா

Syndication

வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 15 ஆவது விளையாட்டு விழா பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வி

இயக்குநா் ஆறுமுகம் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். முன்னாள் மண்டல முதுநிலை மேலாளா் கேப்டன் பிரேம்குமாா் கலந்து கொண்டு, ஒலிம்பிக் கொடியையும், பள்ளியின் தாளாளா் திருமாறன்

பள்ளியின் கொடியையும் ஏற்றினா். உடற்கல்வி இயக்குநா்

உமாநாத் விளையாட்டு ஆண்டு அறிக்கை வாசித்தாா்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குநா் முருகவேள், முதல்வா் ஸ்ரீ குமாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடக்க நிகழ்ச்சியாக மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்ற விளையாட்டுப்

போட்டிகள் நடைபெற்றன. இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சிறப்பு அழைப்பாளா்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT