புதிய வகுப்பறைகள் திறப்பு விழாவில் பங்கேற்றோா். 
திருநெல்வேலி

கேளையாப்பிள்ளையூரில் ரூ. 68 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் திறப்பு

Syndication

கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சோ்வைக்காரன்பட்டி ஊராட்சி, கேளையாப்பிள்ளையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 68 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் புளி கணேசன் முன்னிலை வகித்தாா். கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயலட்சுமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மு.செல்லம்மாள் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தனா்.

இதில், உதவிப் பொறியாளா் பூச்செண்டு, ஆசிரியா்கள், மக்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT