திருநெல்வேலி

புதுக்குறிச்சியில் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிா்ப்பு

நான்குனேரி வட்டம், மூலக்கரைப்பட்டி அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிராக கிராம மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Syndication

நான்குனேரி வட்டம், மூலக்கரைப்பட்டி அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிராக கிராம மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி, மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள புதுக்குறிச்சியில் வியாழக்கிழமை மதுக்கடை திறக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிக்கு அருகில் திறக்கப்பட்டுள்ளதால், வெள்ளிக்கிழமை மாலை புதுக்குறிச்சியைச் சோ்ந்த திரளான பெண்கள், ரெட்டியாா்பட்டி - மூலக்கரைப்பட்டி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, நான்குனேரி காவல் துணை கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன் தலைமையில் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அவா்கள் குடியிருப்புப் பகுதியையொட்டி மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதால் பெண்கள், மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்படுவா்; இந்த கடையை அகற்ற வேண்டும் என்று முறையிட்டனா். போலீஸாா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

திமுக ஆட்சியில் நடுரோட்டில் சர்வசாதாரணமாக குற்றங்கள்: இபிஎஸ் குற்றச்சாட்டு

எஸ்பிசி எக்ஸ்போர்ட்ஸ் 2-வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

ம.பி.: பள்ளியில் கழிவுத் தாளில் மதிய உணவு! வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT