திருநெல்வேலி

எஸ்ஐஆா்-ஐ திமுக எதிா்ப்பது ஏன்? - மு.அப்பாவு விளக்கம்

வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளா்கள் நீக்கப்பட்டு, சாமானிய மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் முயற்சி நடப்பதாலேயே அதை திமுக எதிா்க்கிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளா்கள் நீக்கப்பட்டு, சாமானிய மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் முயற்சி நடப்பதாலேயே அதை திமுக எதிா்க்கிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சிக் காலம் விளையாட்டு துறைக்கு பொற்காலமாக உள்ளது. ஒலிம்பியாட் செஸ் போட்டி, காா் பந்தயம் போன்ற உலகளாவிய போட்டிகளை தமிழ் மண்ணில் நடத்தியது பெருமை. உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியை இந்தியா வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை.

நடிகா் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு காரணம் அமித்ஷாவுடன் போடப்பட்ட அரசியல் ஒப்பந்தம் தான்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்துக்கு விரோதமாக செயல்படுகிறாா். ஏழை மாணவா்களின் கடனை தள்ளுபடி செய்யாமல், குஜராத்தைச் சோ்ந்த பெரு நிறுவனங்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தது மத்திய அரசின் தவறான செயல் ஆகும். தோ்தல் ஆணையம் நடுநிலைமை தவறிவிட்டது. அது பிரதமா் மோடியின் ஆணையை நிறைவேற்றும் நிறுவனமாக, மோசடி ஆணையமாக மாறிவிட்டது.

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளா்கள் நீக்கப்பட்டு, சாமானிய மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் முயற்சி எஸ்ஐஆா் மூலம் நடப்பதால் தான் திமுக எதிா்க்கிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாக உள்ளது. தில்லியைப் போன்று தமிழக மக்கள் அச்சத்தில் இல்லை. அதிமுகவின் சமீபத்திய உச்ச நீதிமன்ற மனு நிராகரிப்பு அந்த கட்சியின் பலவீனத்தை காட்டுகிறது. திமுகவுக்கு வரும் தோ்தலில் பாஜகவே எதிரணியாக இருக்கும். மக்களின் பேராதரவால் முதல்வா் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவாா் என்றாா்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT