வைகோ - மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

மக்களின் காதில் பொன் ஆபரணம்: வைகோவின் சூசகமான பதில்

மக்களின் காதில் பொன் ஆபரணம் குத்தப்பட்டுள்ளது என வைகோவின் சூசகமான பதில் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் மக்களின் காதில் பொன் ஆபரணத்தை குத்தியுள்ளது என்று காது குத்தும் வேலை என்கிற அதிமுக-வின் குற்றச்சாட்டுக்கு வைகோ பதிலளித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பட்ஜெட் குறித்துப் பேசுகையில், திகைக்க வைக்கும் வகையில் 36 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.

அனைத்து தரப்பினரையும் கவருவதாகவும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.

வேதாந்தத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை பல்வேறு போராட்டங்களுக்கு பின் மூடப்பட்டது. இப்போது புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல் வேதாந்த நிறுவனம் பசுமை தாமிரம் என்கிற பெயரில் புதிய நிறுவனத்தை தூத்துக்குடியில் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு அரசு கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்து தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த பொது மக்கள், மீனவர்கள், விவசாயிகள் எந்த வடிவத்திலும் ஸ்டெர்லைட் ஆலை வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஓரிருவர் திமுகவை விமர்சனம் செய்துள்ளார்கள். ஆனால் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை, அவர்கள் கூறும் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாமல் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்கிற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

திமுக தலைமைக்கும் காங்கிரஸ் அகில இந்திய தலைமைக்கும் இணக்கமான நட்பு இருப்பதால் சிலர் பேசும் கருத்துகள் புறந்தள்ளப்பட்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் என நம்புகிறேன்.

வரும் தேர்தல் முடிவுகள் கூட்டணி ஆட்சி என்கிற பேச்சுக்கே இடமளிக்காத வகையிலும் வாய்ப்பளிக்காத வகையிலும் இருக்கும். திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

முதலமைச்சர் அறிவிக்கும் அறிவிப்புகளை பார்த்து எதிர் அணியினர் கலங்கிப் போய் இருக்கிறார்கள். நாங்கள் முதலமைச்சராவோம் என கூறிக் கொண்டிருந்தவர்கள் இந்த அறிவிப்புகளை பார்த்து பதட்டம் அடைந்துள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே அந்த கட்சியில் பலர் பல கருத்துகளை கூறுவார்கள். அந்த கருத்துகளை பொருட்படுத்த வேண்டியதில்லை.

திமுக தலைமையும் காங்கிரஸ் தலைமையும் இணக்கமாக இருப்பதால் கூட்டணியில் எந்த பிரச்சனையும் வராது என நம்புகிறேன்.

திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவது குறித்து எங்கள் கருத்தைதான் நாங்கள் கூற முடியும் மற்றவர்களுக்கு அட்வைஸ் கூறும் தகுதி எனக்கு இல்லை.

இடைக்கால பட்ஜெட் காது குத்தும் வேலை என அதிமுக வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, இது காதில் பொன் ஆபர்ணம் குத்தும் வேலை என்றார்.

ஜனநாயக நாட்டில் இருக்கக்கூடிய கட்சிகள் அவர்களுடைய சொந்த கருத்துகளை கூறி வருவார்கள். அந்தக் கருத்துகளை அலட்சியம் செய்து விட்டு எந்த நெருடலும் இல்லாமல் திமுக கூட்டணி ஏற்றத்தை சந்திக்கும் என நான் நம்புகிறேன்.

மதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தை பெற்று கொடுத்தது அதிமுகதான் எனக் கூறுவது தவறு. 1999 ல் திமுகவுடன் கூட்டணி அமைத்து நான்கு எம்பிக்கள் வெற்றி பெற்றோம். அப்பொழுதுதான் எங்களுக்கு பம்பரம் சின்னம் கிடைத்தது.

கட்சிகள் கூட்டணியிலும் இருந்திருக்கிறார்கள், பிரிந்தும் இருந்திருக்கிறார்கள், நாங்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு எதுவாக இருந்தாலும் திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இருந்தோம். அதில் தற்போது உறுதியாக இருக்கிறோம்.

செய்திகளில் வரவேண்டும் என்பதற்காக சிலர் சில கருத்துகளை கூறுவார்கள் அதற்கெல்லாம் பதில் கூற முடியாது.

தமிழ்நாட்டுப் பெண்களின் மொத்த ஆதரவையும் ஒரே அறிவிப்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெற்றுவிட்டார். தேர்தல் போட்டியில் முதலமைச்சர் வெற்றி பெற்று விட்டார்.

5000 ரூபாய் பணம் வழங்கியது உள்ளிட்ட அறிவிப்புகளால் ஏற்படும் கடனையும் நிதிச் சுமையையும் சமாளிப்பதற்கு திட்டம் வகுத்து அதில் முதலமைச்சர் வெற்றியும் காண்பார் என்றார் வைகோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும்! ஆனால் உள்ளே..!” நிதிநிலை அறிக்கையை விமர்சித்த EPS

பொன்னமராவதி அருகே சிவராத்திரி விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி!

புதிய அறிவிப்புகளுடன் ஜூலையில் நிதிநிலை அறிக்கை: முதல்வர் ஸ்டாலின்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20 வரை நடைபெறும்! - அப்பாவு

”சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி” அமைச்சர் தங்கம் தென்னரசு!

SCROLL FOR NEXT