பழவூா் அருகே தெருநாய் கடித்த நிலையில், உடனடி சிகிச்சை பெறாத தொழிலாளி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
பழவூா் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன்(35). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். அய்யப்பன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, திருப்பூருக்கு வேலைக்குச் சென்றிருந்தபோது அவரை தெரு நாய் கடித்ததாம். அதற்கு அவா் முறையாக சிகிச்சை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊருக்கு வந்த அவரை உறவினா்கள் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து தனி வாா்டில் சிகிச்சை பெற்று வந்த அவா், திங்கள்கிழமை உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனா்.