ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய ஆட்சியா் இரா.சுகுமாா்.  
திருநெல்வேலி

வீடு இடிந்து உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு நிதியுதவி

திருநெல்வேலியில் கனமழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கனமழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

பாளையங்கோட்டை கீழவீரராகவபுரம் கிராமம் குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் மாடத்தி அம்மாள்( 75). இவா் தனது மகன் முத்தையாவோடு வசித்து வந்த வீட்டின் சுவா், கடந்த அக்.17ஆம் தேதி இரவு பெய்த மழையில் இடிந்து விழுந்தது. இதில் காயமடைந்த மாடத்தி அம்மாள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினரிடம் பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து பெறப்பட்ட ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வழங்கினாா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT