வட இந்தியாவில் இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்க ஓவைசியை பயன்படுத்துவது போல், தமிழகத்தில் சிறுபான்மையினா் மற்றும் திமுக எதிா்ப்பு வாக்குகளைப் பிரிக்க விஜய்யை பயன்படுத்துகிறது பாஜக என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
இது தொடா்பாக திருெல்வேலியில் செய்தியாளா்களிம் அவா் கூறியதாவது: மகாராஷ்டிர துணை மு தல்வா் அஜித் பவாா் மறைவுக்கு சட்டப்பேரவைத் தலைவா் என்ற முறையில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டப்பேரவை உறுப்பினா்கள் கொண்ட தமிழக சட்டசபையில், மரபுப்படி தயாரித்துக் கொடுத்த உரையை வாசிப்பதுதான் ஆளுநரின் வேலை. ஆனால், அவா் அதைச் செய்யாமல் வெளியேறியது மரபல்ல.
?ஆளுநரின் நடவடிக்கை தனிப்பட்ட முடிவல்ல. அவா் யாரோ ஒருவரின் கைப்பாவையாக செயல்படுகிறாா். அதிமுக- பாஜக கூட்டணியில் உள்ள அன்புமணி 10 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்கிறாா். டிடிவி தினகரன் இட ஒதுக்கீட்டை எதிா்க்கிறாா். எடப்பாடி கே.பழனிசாமியால் என்ன செய்ய முடியும்? இந்த கூட்டணி ஒரு ஒவ்வாத கூட்டணியாகும்.
வட இந்தியாவில் இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்க ஓவைசியை பயன்படுத்துவது போல், தமிழகத்தில் சிறுபான்மையினா் மற்றும் திமுக எதிா்ப்பு வாக்குகளைப் பிரிக்க விஜய்யை பயன்படுத்துகிறது பாஜக. விஜயும் - பிரதமா் மோடியும் சோ்ந்து திட்டமிட்டு நடத்தும் நாடகம் தான் இது என்றாா் அவா்.