முகப்பு
தூத்துக்குடி

குப்பைக் கிடங்கில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் உள்ள குப்பைக் கிடங்கில்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:06 PM
பகிர்:

தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் எரிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட ஆண் சடலம் குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தருவைகுளம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தீவைத்து எரிக்கப்படும். இந்த குப்பைக் கிடங்கில் எரிந்தநிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸôருக்கு பொதுமக்கள் சிலர் செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, தூத்துக்குடி மாநகர காவல் உதவி கண்காணிப்பாளர் ஜெ. மகேஷ் தலைமையில், தாளமுத்துநகர் போலீஸôர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

எரிந்த நிலையில் காணப்பட்டவருக்கு ஏறத்தாழ 40 வயது இருக்கும். அவர் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவில்லை. தாளமுத்துநகர், வெள்ளப்பட்டி, தருவைகுளம் பகுதியில் இளைஞர்கள் யாரேனும் காணாமல் போனதாக புகார் உள்ளதா என போலீஸôர் விசாரித்து வருகின்றனர். சடலமாக கிடந்த இளைஞரை யாரேனும் கொலை செய்து குப்பைக் கிடங்கில் வைத்து எரித்துச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவரின் குடல் வெளியே வந்தநிலையில் உள்ளதால், கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸôர் சந்தேகிக்கின்றனர். உடல் எரிக்கப்பட்டுள்ளதால், சம்பவ இடத்திலேயே வைத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.