முகப்பு
தூத்துக்குடி

சட்ட விரோதமாக மது விற்பனை: 2  இளைஞர்கள் கைது

கோவில்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:06 PM
பகிர்:

கோவில்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 2  இளைஞர்களை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

 கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள மாணவர் விடுதி அருகே மற்றும் எட்டையபுரம் சாலையிலும் மது விற்பனை நடைபெறுவதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.

 அதையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் (பொறுப்பு)  தலைமையில், போலீஸôர் கடலையூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 அப்போது மாணவர் விடுதி அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞரைப் பிடித்தனர்.

 விசாரணையில் அவர், கடலையூர் பிரதான சாலையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் தவமணி (28) என்பதும், அவரிடமிருந்து 141  மது பாட்டில்களையும் போலீஸôர் பறிமுதல் செய்தனர்.  அதுபோல, எட்டையபுரம் சாலையில் உள்ள விநாயகர் கோவில் அருகே மது விற்பனை செய்து கொண்டிருந்த குருமலையையடுத்த வெங்கடேஸ்வரபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த பூலோகப்பாண்டி மகன் முத்துக்குமார்(32) கைது செய்து, அவரிடமிருந்து 35 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

 இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.