சிவகாசி பொறியியல் கல்லூரியில் கட்டணச் சலுகை'
சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கேற்ப கட்டணச் சலுகை வழங்கப்படுவதாக கல்லூரித் தலைவர் கேசவன் கூறியுள்ளார்.
சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கேற்ப கட்டணச் சலுகை வழங்கப்படுவதாக கல்லூரித் தலைவர் கேசவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இக்கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப, மாணவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. நிகழாண்டில் இன்ஜினியரிங் கட்-ஆப் 170-க்கு மேல் உள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்.
கட்-ஆப் 160-க்கு மேல் உள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் ரூ.15ஆயிரம் சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகை கவுன்சிலிங் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும்.
Advertisement
Advertisement
தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு வீரர்களுக்கும் கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 94425-44487 என்ற கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.