முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூர் கூட்டுறவு வங்கி தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் வியாழக்கிழமையன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்

திருச்செந்தூர் கூட்டுறவு வங்கி தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் வியாழக்கிழமையன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்

Updated On : 13 மே 2013, 2:01 am IST
பகிர்:

திருச்செந்தூர் கூட்டுறவு வங்கி தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் வியாழக்கிழமையன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

கூட்டுறவு நகர வங்கி :  கூட்டுறவு நகர வங்கி தேர்தலில் வெற்றி பெற்ற 11 நிர்வாகக்குழு உறுப்பினர்களில் தலைவராக ரா.சுப்பிரமணியன் மற்றும் துணைத்தலைவராக ந.ஜான் எஸ்தர் லோபோ ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் வியாழக்கிழமை காலை பொறுப்பேற்றனர்.

கூட்டுறவு தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி :  கூட்டுறவுத் தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி தேர்தலில்  11 நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தலைவராக விஜயராகவனும், துணைத்தலைவராக லிங்ககுமாரும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வியாழக்கிழமை காலை பொறுப்பேற்றனர். வங்கியின் செயலாட்சியர் பா.மால்ராஜ், செயலர் ஜாண்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement

 கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் :  வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தலைவர் கு.முருகேசன், துணைத்தலைவர் பெ.நாராயணன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். வங்கிச் செயலர் எம்.முருகன் உடனிருந்தார்.

 நிகழ்ச்சியில் திருச்செந்தூர் பேரூராட்சித்தலைவர் மு.சுரேஷ்பாபு, ஒன்றிய அ.தி.மு.க. செயலர் அமலி டி.ராஜன், நகரச்செயலர் வி.எம்.மகேந்திரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மு.வடிவேல், ஒன்றிய அவைத்தலைவர் அமலி ஜெஸ்லர், ஒன்றிய மகளிரணிச் செயலர் ராணி, வார்டு செயலர்கள் மணிகண்டன், சங்கர், முனியசாமி மாவட்ட பிரதிநிதி பஷீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.