முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

தூத்துக்குடி கணேஷ் நகரில் ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 13 மே 2013, 2:05 am IST
பகிர்:

தூத்துக்குடி கணேஷ் நகரில் ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

 தூத்துக்குடி கணேஷ் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் காளிராஜன்(68). ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளரான இவர், தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை பெங்களூருக்குச் சென்றுவிட்டாராம்.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இவரது வீட்டுக்கு வந்த பணியாளர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாராம். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டிருந்ததாம்.

 பின்னர், பெங்களூரில் உள்ள காளிராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தென்பாகம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.  பெங்களுரிலிருந்து காளிராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்த பின்புதான் வீட்டில் திருடு போயிருப்பது குறித்த விவரம் தெரியவரும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.