தூத்துக்குடி

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் ஆவணி பெருவிழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

DIN

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் ஆவணி பெருவிழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசாமி கோயிலில் ஆவணி வருஷாபிஷேக பெருவிழா செப். 4ஆம்தேதி தொடங்கியது. இவ்விழாவானது புதன்கிழமை (செப்.14) வரை 11நாள்கள் நடைபெறுகிறது.
விழா நாள்களில் சுவாமி வீதி உலா, திருவாசகம் முற்றோதுதல், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம், 1008 திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெற்றன.  9ஆம் திருநாளான  திங்கள்கிழமை காலை 6மணிக்கு பக்தர்கள் பால்குடம் ஏந்தி ரத வீதிகளில் எடுத்து வருதல், தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,  ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம், சுவாமி, அம்மன் வீதி உலா ஆகியன நடைபெற்றன.
10ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை 10மணிக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம், சிறப்பு அபிஷேகம், மாலை 6மணிக்கு புஷ்பாஞ்சலி, சுவாமி, வீதி உலா நடைபெறுகிறது. நிறைவு நாளான  புதன்கிழமை  (14ஆம்தேதி) முற்பகல் 11மணிக்கு சுவாமிக்கு அன்ன அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் , இரவு 8மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெறுகிறது.  ஏற்பாடுகளை வாலைகுருசுவாமி பக்த குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT