தூத்துக்குடி

முன்னாள் படைவீரர்கள் சந்திப்புக் கூட்டம்

DIN

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
முன்னாள் படைவீரர்களுக்கான கொடி நாள் வசூல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம் தலைமை வகித்தார். மண்டலத் துணை வட்டாட்சியர் சுப்புலட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள் அப்பனராஜ், கோவிந்தராஜ், உதவியாளர் சுபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் நலச் சங்கத் தலைவர் கேசவராஜ், செயலர் ராமசந்திரன், உறுப்பினர்கள் சுப்பாராயன், வீரப்பன், செல்வன் துரைராஜ் மற்றும் முன்னாள் படைவீரர்களும், தற்போதைய கிராம நிர்வாக அலுவலர்களுமான சேகர், போத்திராஜ், மாதவராஜ், ஜெயகுமார், மந்திரசூடாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னாள் படைவீரர்கள் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் அதை ஆங்கிலத்தில் அளிக்க வேண்டும். முன்னாள் படைவீரர்களுக்கு என இடஒதுக்கீடு செய்து நினைவு தூண் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். முன்னாள் படைவீரர்கள் சார்பில் கேட்கப்படும் வாரிசு சான்றிதழ் ஆங்கிலத்தில் அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முன்னாள் படைவீரர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 
 தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் வட்டாட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT