தூத்துக்குடி

மாநில செஸ் போட்டி: சென்னை, தூத்துக்குடி மாணவர்கள் முதலிடம்

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான செஸ் போட்டியில் சென்னை மற்றும் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்தனர்.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான 14 மற்றும் 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான செஸ் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், 14 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் 630 பேரும், 18 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் 110 பேரும் கலந்துகொண்டனர்.
இதில், 18 வயதுக்குள்பட்டோர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ஹேமந்த் ராம் 8 புள்ளிகள் பெற்று முதலிடமும், மதுரையைச் சேர்ந்த செல்வமுருகன் மற்றும் ஷியாம்சுந்தர் ஆகியோர் தலா 7.5 புள்ளிகள் பெற்று 2 மற்றும் 3ஆம் இடங்களையும் பிடித்தனர்.
14 வயதுக்கு உள்பட்டடோர் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர் சக்தி விஷால் 9 புள்ளிகள் பெற்று முதலிடம், திருச்சி மாணவர், விக்னேஷ் காசி 8 புள்ளிகள் பெற்று 2ஆம் இடம், திருநெல்வேலி மாணவர் சிவசுப்பிரமணியன் மனோஜ் 8 புள்ளிகள் பெற்று 3ஆம் இடமும் பிடித்தனர்.
சனிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். சென்னையைச் சேர்ந்த சர்வதேச கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
இப்போட்டிகளில் இரு பிரிவுகளிலும் முதல் 15 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை, கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். அருணாசலம் தலைமையில், கல்லூரி இயக்குநர், முதல்வர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT