தூத்துக்குடி

விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயாவில் ஆங்கில எழுத்துக்கள் உச்சரிப்பு போட்டி

DIN

விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் தென்மண்டல அளவிலான பள்ளிகளுக்கிடையேயான ஆங்கில எழுத்துக்கள் உச்சரிப்பு போட்டி நடைபெற்றது.
ஸ்ரீ அம்பாள் வித்யாலயா கல்வி அறக்கட்டளை பொருளாளர் எஸ்.கே. சுப்பாரெட்டியார் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் ஆப்ரகாம் வசந்தன் முன்னிலை வகித்தார்.
போட்டியில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 33 பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். பேராசிரியர் கதிர்காமு முத்தையா தலைமையிலான ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர்.
இதில், பரமக்குடி தொன்போஸ்கோ பள்ளி மாணவி தர்ஷினி முதலிடத்திலும், கோவில்பட்டி கே.ஆர்.ஏ. பள்ளி மாணவி லட்சுமி கிருஷ்ணிகா மற்றும் விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா மாணவர் ஜெயகுரு ஆகியோர் இரண்டாமிடத்திலும், கோவில்பட்டி லட்சுமி ஸ்ரீனிவாசா பள்ளி மாணவர் கோகுல் மற்றும் விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா மாணவர் பாலநந்தா ஆகியோர் மூன்றாமிடத்திலும் வென்றனர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், கோப்பைகள், ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.  போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பிரம்ம ஞானமுத்து பாரதி, மகேஸ்வரி, சுகன்யா, வினோத், யமுனா ராணி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  பள்ளி துணை முதல்வர் ஜெயகாந்த் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT