தூத்துக்குடி

மாநில விநாடி-வினா போட்டி: நாகர்கோவில் எஸ்.டி. இந்துக் கல்லூரி முதலிடம்

DIN

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான விநாடி-வினா போட்டியில், நாகர்கோவில் எஸ்.டி. இந்துக் கல்லூரி முதலிடத்தை வென்றது.
கோயம்புத்தூர் லட்சுமி மிஷின் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில், ஜி.கே.தேவராஜுலு நினைவு 24ஆவது விநாடி-வினா போட்டி இக்கல்லூரியில் நடைபெற்றது. இதில், 35 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
இறுதிப் போட்டியில் நாகர்கோவில் எஸ்.டி. இந்துக் கல்லூரி மாணவர்கள் பிரபாகர், சுந்தர் ஜெயந்த் ஆகியோர் முதலிடமும், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி மாணவர்கள் கோவர்த்தனா, ஜெபாஸ் இம்மானுவேல் 2ஆம் இடத்தையும், விருதுநகர் வி.வி.வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரி மாணவிகள் நந்தினி, ராஜலட்சுமி 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரிச் செயலர் செல்வராஜ், முதலிடத்தில் வென்றோருக்கு தலா ரூ.2ஆயிரம் ரொக்கப்பரிசு, சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும், 2ஆம் இடத்தில் வென்றோருக்கு தலா ரூ.1,500, சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
விழாவில், கல்லூரி முதல்வர் (பொ) ஆதிலட்சுமி, சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT