தூத்துக்குடி

உலக வன நாள் விழா

DIN

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உலக வன நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொ) கு.ஆதிலட்சுமி தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் கிருஷ்ணசாமி, அலுவலக கண்காணிப்பாளர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவர் வெண்ணிலா தாமோதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கிவைத்தார்.
பின்னர், மாணவர்களிடையே காடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வனப்பாதுகாப்பு என்ற தலைப்பிலான ஓவியப் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பா.மகேஷ்குமார், கவிதாமஞ்சு ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT