அரசு மருத்துவமனை செவிலியரை தாக்கிய இளைஞர் கைது
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலிலியரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலிலியரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில் வடசேரி ஒட்டுபுரை தெருவைச் சேர்ந்த தேவதாஸ் மகன் ஜிஜின்தேவ்(28), திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த போது, திருச்செந்தூர் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த தனராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
அப்போது அவருடன் வந்த அவரது நண்பர் அடைக்கலாபுரம் சேகர் மகன் மகேஷ்(32) , தனராஜிக்கு போர்வை கேட்டு , செவிலிலியர் ஜிஜின்தேவிடம் வாக்குவாதம் செய்து அவரது சட்டை பிடித்து இழுத்து தாக்கி மிரட்டினாராம்.
இதுகுறித்து ஜிஜின்தேவ் திருச்செந்தூர் தாலுகா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் கருப்பசாமி வழக்குப் பதிந்தார். ஆய்வாளர் ரகுராஜன் விசாரணை நடத்தி மகேஷை கைது செய்தார்.