தூத்துக்குடி

தனியார் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது

DIN

சாத்தான்குளம்  அருகே தனியார் பள்ளி  ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த  இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 கருவேலம்பாடு கிராமத்தைச் சேர்ந்த  ஆனந்தராஜ் மகள் மகேஸ்வரி (25).  சாத்தான்குளத்தில்  உள்ள தனியார் பள்ளியில்  ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.  கடந்த 7 ஆம் தேதி பன்னம்பாறை விலக்கில்  ஊருக்கு செல்ல நின்றபோது  பைக்கில் வந்த 3 பேர்  அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.  
இதுகுறித்து  சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். நடத்தினார்.  இதில்,   திருநெல்வேலி மாவட்டம்,  நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சு. இசக்கிப்பாண்டி (19)  என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வந்தனர்.
இந்நிலையில்  சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் சு. ராமகிருஷ்ணன் தலைமையில்  போலீஸார் செவ்வாய்க்கிழமை  ரோந்து சென்ற போது,  சங்கரன்குடியிருப்பு விலக்கில் பதுங்கி  இருந்த  இருவரை மடக்கி பிடித்தனர்.  அவர்களிடம் விசாரித்ததில்,   நான்குனேரி  அருகே  உள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்த வா. சுடலைக்கண் (21),   சு. மணிகண்டன்  என்பதும்,   ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும்  தெரியவந்தது.  இதையடுத்து  அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து  3 பவுன் தங்க நகையை மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT