தூத்துக்குடி

உலக கழிவறை தின பேரணி

DIN

உலக கழிவறை தினத்தையொட்டி, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் பேரணி நடைபெற்றது.
இந்நிறுவனம் சார்பில், தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உடல்நலம்  மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வடக்கு சிலுக்கன்பட்டி,  மீளாவிட்டன்,  டி.வி. புரம், ஏ. குமாரரெட்டியார்புரம்,  டி. குமரகிரி ஆகிய கிராமங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் மூலமாக பிரசாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. பேரணியை மீளவிட்டான் கூட்டுறவு வங்கிச் செயலர் சுதாகர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியின்போது,  அடிப்படை சுகாதாரம் பேணப்படாவிட்டால் அது மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறியப்படுத்துவது மற்றும்  பாதுகாப்புடன் மேலாண்மை செய்யப்பட்ட சுகாதாரத்தை பேண ஊரக மக்களை ஊக்கப்படுத்துவது ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT