முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் திருநங்கைகளுக்கான கருத்தரங்கு

தூத்துக்குடியில் மாவட்ட  நீதிமன்றத்தில் இயங்கிவரும் சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், திருநங்கைகள் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

தூத்துக்குடியில் மாவட்ட  நீதிமன்றத்தில் இயங்கிவரும் சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், திருநங்கைகள் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரான சார்பு நீதிபதி சு. சாமுவேல் பெஞ்சமின் தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கந்தசாமி,  மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஜெயசூரியா, மாவட்ட குற்றவியல் தலைமை வழக்குரைஞர் சந்திரசேகர், மூத்த வழக்குரைஞர் சாமுவேல் ராஜேந்திரன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
திருநங்கைகளுக்குரிய சமூகப் பிரச்னை, வேலைவாய்ப்பு பிரச்னை, அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும், திருநங்கைகள் குடும்ப அட்டை,  வாக்காளர் அடையாள அட்டை, இலவச வீட்டு மனைப் பட்டா பெறுவது குறித்தும், தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கருத்தரங்கில் கலந்துகொண்ட திருநங்கைகள் தாங்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து தனித்தனியே எடுத்துக் கூறினர். அதற்கான உரிய பதில்கள் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →