ஆழ்வார்திருநகரியில் காங்கிரஸ் உண்ணாவிரதம்
சமூக மத நல்லிலிணக்கத்தை வலிலியுறுத்தி, ஆழ்வார்திருநகரியில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக மத நல்லிலிணக்கத்தை வலிலியுறுத்தி, ஆழ்வார்திருநகரியில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தலைமை வகித்தார். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், ஆழ்வார்திருநகரி நகரத் தலைவர் இளங்கோ நயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தை ஏ.பி.சி.வி. சண்முகம் தொடங்கிவைத்து பேசினார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சவரியாணந்தம், சந்திரசேகரன், மகேந்திரன், அலெக்ஸ்சாண்டர், சிவசுப்பிரமணியன், தெற்கு மாவட்ட மீனவர் அணித் தலைவர் அந்தோணி சுரேஷ், தெற்கு மாவட்ட மாநகர பொருளாளர் அந்தோணிமுத்து, மாவட்டப் பொருளாளர் நடராஜன், தெற்கு மாவட்ட மாநகர அமைப்புசாரா தொழிலாளர் தலைவர் பிச்சையா, மாவட்ட ஐ.என்.டி.யூ.சி தலைவர் ராஜ், துணைச் செயலர் சந்திரன், சேவாதள காங்கிரஸ் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகா உள்ளிட்ட பலர் பேசினர்.
வட்டார தலைவர்கள் சுயம்புலிலிங்கம், பார்த்தசாரதி, செந்தில்குமார், சக்திவேல், முருகன், சற்குரு, துரைராஜ் ஜோசப், சக்திவேல், முருகன், நகரத் தலைவர்கள் பால சுப்பிரமணியன், ரவி, மணி, ராஜா மணி, முன்னாள் வட்டார தலைவர்கள் நல்லகண்னு உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முன்னாள் எம்எல்ஏ டேனியல்ராஜ் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்தார்.