புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணியை கைவிட வேண்டும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிபாரதம் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலர் சே. சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஏ. மதுரைவீரன், மாவட்ட துணைச் செயலர் அரசூர் சேர்மத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்டச் செயலர் சி.எம். முத்துபாண்டியன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளர் து. இசக்கிமுத்து, மாவட்ட இளைஞரணிச் செயலர் வீர. சுடலைமுத்துபாண்டியன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் எம். செந்தில்குமார், நெல்லை மாவட்ட துணைச் செயலர் முனிஸ்வரன், சாத்தான்குளம் ஒன்றியத் தலைவர்ராஜ், துணைத் தலைவர் சிவாபீட்டர், ஒன்றியப் பொருளாளர் ஏ. சரவணகுமார், நகர துணைச் செயலர் எம். அஜித்ராஜா, ஒன்றிய இளைஞரணிச் செயலர் பிரபாகரன், கிளைச் செயலர் நயினார், ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சாத்தான்குளம் ஒன்றியச் செயலர் எம். முத்துக்குட்டி நன்றி கூறினார்.