முகப்பு
தூத்துக்குடி

ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு

கோவில்பட்டியை அடுத்த கடம்பூர் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலத்தை மீட்டு  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:59 AM
பகிர்:

கோவில்பட்டியை அடுத்த கடம்பூர் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலத்தை மீட்டு  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடம்பூர் - குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் தண்டவாளத்தில் கிடந்த சடலத்தை மீட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
விசாரணையில், இறந்தவர் கயத்தாறை அடுத்த ராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் பெருமாள் (35) என்பது தெரியவந்தது. இவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்தாரா, ரயிலில் பயணம் செய்யும்போது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.