முகப்பு
தூத்துக்குடி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மாணவர் சாவு

ஓட்டப்பிடாரம் அருகே திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஐடிஐ மாணவர் உயிரிழந்தார்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:03 am IST
பகிர்:

ஓட்டப்பிடாரம் அருகே திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஐடிஐ மாணவர் உயிரிழந்தார்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேலமீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் வேல்ராஜ் (18).  ஐடிஐ படித்து வந்தார்.  இவர்,  மேலமீனாட்சிபுரத்தில் இருந்து கவர்னர்கிரி நோக்கி திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றாராம்.
 அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் வேல்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.