முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் அணிமாறிய 3 எம்எல்ஏக்கள்?

அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பற்றி...

கோப்புப் படம் - ANI
பகிர்:

அதிமுவில் சி.வி. சண்முகம் தரப்பில் இருந்து 3 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எதிராக சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் 25 அதிமுகவுக்கு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து தற்போதைய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக இருந்த 3 எம்எல்ஏக்கள் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆற்காடு எம்எல்ஏ சுகுமார், அந்தியூர் எம்எல்ஏ ஹரிபாஸ்கர் ஆகிய இருவரும் இன்று காலை எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அதேபோல பண்ருட்டி எம்எல்ஏ மோகன், இபிஎஸ் ஆதரவாளரான கே.பி. முனுசாமியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். இதனால் இவர்கள் மூவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கொறடா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் இன்று சந்தித்துப் பேசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

summary

3 AIADMK MLAs Switching from sp velumani team to eps team

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.