9 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஏப். 20) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஏப். 20) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வட்டாட்சியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஏப். 20) நடைபெறுகிறது.
அதன்படி, தூத்துக்குடி வட்டம் மேலத்தட்டப்பாறை, ஸ்ரீவைகுண்டம் வட்டம் பெருங்குளம், திருச்செந்தூர் வட்டம் தென்திருப்பேரை, சாத்தான்குளம் வட்டம் பிடானேரி, கோவில்பட்டி வட்டம் இடைசெவல் பகுதி-2, விளாத்திகுளம் வட்டம் புதூர் குளக்கட்டாக்குறிச்சி , எட்டயபுரம் வட்டம் ஆத்திகிணறு , தி.சண்முகபுரம், ஓட்டப்பிடாரம் வட்டம் சில்லாங்குளம், கயத்தாறு வட்டம் செட்டிகுறிச்சி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
முகாமின்போது, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.