கயத்தாறு நூலகத்தில் புத்தகக் கண்காட்சி
கயத்தாறு நூலகத்தில் சிறுவர்களுக்கான புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கயத்தாறு நூலகத்தில் சிறுவர்களுக்கான புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவர், மாணவிகளுக்கான புத்தகக் கண்காட்சி கயத்தாறு நூலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஜான்கணேஷ் தலைமை வகித்து, இனிப்பு எடு கொண்டாடு, வெற்றி நிச்சயம் என்ற நூல்களை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.
நூலகப் புரவலர் முத்துமுருகன், ஓய்வு பெற்ற நூலகர் பாடகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தகக் கண்காட்சியை பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை மணிமதி திறந்து வைத்துப் பார்வையிட்டார். புத்தகக் கண்காட்சியை ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் பூலையா, நூலக வாசகர் சுப்பையா உள்பட திரளான பள்ளி மாணவர், மாணவிகள் கண்காட்சியைப் பார்வையிட்டனர். மாணவர் முத்துகணேஷ் நன்றி கூறினார்.