முகப்பு
தூத்துக்குடி

பன்னம்பாறை சாய்நாத ஆலயத்தில் கும்பாபிஷேகம்

பன்னம்பாறை சிவானந்தபுரம் ஸ்ரீவைத்யநாத சாய்நாத ஆலய கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

பன்னம்பாறை சிவானந்தபுரம் ஸ்ரீவைத்யநாத சாய்நாத ஆலய கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.  இதில் திரளான பகதர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
இந்த ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி சனிக்கிழமை  காலை 8.45 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், மாலை 4 மணிக்கு எஜமான் சங்கல்பம்,  வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், கலச ஆகாசனம், யாகசாலை பிரவேசம், இரவு 7.30 மணிக்கு முதல் யாகசாலை பூஜை, நூதன விக்கிரங்களுக்கு கண் பிரதிஷ்டை பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. 
2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோபூஜை,  கன்னிகாபூஜை,  வடுகபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும்,  6.45 மணிக்கு கடம் புறம்பாடு,  9.15 மணிக்கு விமான அபிஷேகம், 9.30 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  10 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீசாய்பாபா சந்தோஷ்மாதா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →