முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கல்லூரியின் அறிவியல் மற்றும் மானுடவியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு,  கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.  கோவில்பட்டி போக்குவரத்து உதவி- ஆய்வாளர் சுடலைமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு,  சாலைப் பாதுகாப்பின் அவசியம்,  சாலை விபத்துக்கான காரணங்கள் குறித்தும்,  ஓட்டுநர் உரிமம் பெறாமலும், தலைக்கவசம் அணியாமலும் வாகனம் ஓட்டக்கூடாது என்றும்,  இருசக்கர வாகனத்தில் 3  பேர் பயணிக்கக் கூடாது. அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவதை தவிர்த்து விபத்துக்களை தடுக்க ஒவ்வொருவரும் சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர். 
ஓய்வுபெற்ற வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.  பேராசிரியர் தம்பா நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →