தூத்துக்குடி

தொழிலாளர்களுக்கான உரிமைகளை அமல்படுத்தாத ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கான சட்டப்படியான கூலி மற்றும் சட்ட உரிமைகளை அமல்படுத்தாத தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அமல்படுத்த வலியுறுத்தியும், சேமநல நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கான திட்டங்களை பதிவு செய்யக் கோரியும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொழிலாளர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வை அறிவித்தனர்.
இதனையடுத்து, தொழிற்சங்கத்தினர் 20 சதவீத ஊதிய உயர்வை மேலும் அதிகரிக்க வேண்டும். சேமநல நிதி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கான பலன்களை முறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச கூலியை அமல்படுத்தாத மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை அமல்படுத்தாத தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தீப்பெட்டித் தொழிலாளர்கள் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் தமிழரசன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்டப் பொதுச் செயலர் ராஜசேகரன், துணைத் தலைவர் பிச்சையா, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், தீப்பெட்டித் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கற்பகவல்லி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்க மாவட்டச் செயலர் பொன்ராஜ், யு.சி.பி.ஐ. நகரச் செயலர் சங்கரன் ஆகியோர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர், கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் அனிதாவிடம் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT