முகப்பு
தூத்துக்குடி

மது விற்பனை: தொழிலாளி கைது

கழுகுமலையில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.  

Updated On : 9 ஜூலை, 2018 at 7:41 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கழுகுமலையில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.  கழுகுமலை கீழ பஜார் பகுதியில் உதவி ஆய்வாளர் சுமதி தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். இதில், அவர் மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர், தெற்கு கழுகுமலையைச் சேர்ந்த தங்கச்சாமி மகன் கூலித் தொழிலாளி விஜயன்(55) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 25 மது பாட்டில்களைப்  பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.