முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் கீழ்பகுதியில் புதிய பாலம் அருகே பொழுதுபோக்கு சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On : 29 மார்ச், 2018 at 5:58 AM
பகிர்:

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் கீழ்பகுதியில் புதிய பாலம் அருகே பொழுதுபோக்கு சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. 
வட்டாட்சியர் தாமஸ்பயஸ் அருள் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல்அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி, வேளாண் இணை இயக்குநர் (பொ) முத்துஎழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி சார்-ஆட்சியர் (பயிற்சி) லாவண்யா பணியைத் தொடங்கிவைத்தார். முதல் கட்டமாக நடைப்பயிற்சி தளம்,  சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள் அமைக்கப்படுகின்றன. விழாவில்,  பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன்,  வட்ட வழங்கல் அலுவலர் சுல்தான்,  வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன்,  கிராம நிர்வாக அலுவலர்கள் மணிகண்டன்,  ரத்தினராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.