முகப்பு
தூத்துக்குடி

விருது பெற்ற செவிலியருக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவில்பட்டியில் விருது பெற்ற செவிலியருக்கு பாராட்டு விழா நடைபெற்ற

Updated On : 15 மே, 2018 at 12:49 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவில்பட்டியில் விருது பெற்ற செவிலியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
உலக செவிலியர் தினம் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பாக சேவை புரிந்த 251செவிலியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் விஜயலட்சுமியும் விருது பெற்றார். இதையடுத்து விருது பெற்ற விஜயலட்சுமிக்கு பாராட்டு விழா மருத்துவமனை கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் பூவேஸ்வரி தலைமை வகித்தார். மருத்துவர் மோசஸ்பால் முன்னிலை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், விருது பெற்ற செவிலியருக்கு பரிசு வழங்கினார். இதில், மருத்துவர் தேவசேனா, செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.