தூத்துக்குடி

கோவில்பட்டி, ஆறுமுகனேரியில் விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

DIN

கோவில்பட்டி, ஆறுமுகனேரியில் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் சனிக்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். 
கோவில்பட்டியில் உள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி வெள்ளிக்கிழமை   சனிக்கிழமை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நிர்மால்ய தரிசனம், சங்காபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 
இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இக்கோயிலில் நாள்தோறும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு,   பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறும்.   மாலை 5  மணி முதல் 8.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.  டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை மற்றும் படிபூஜை நடைபெறுகிறது. கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில், பழனி ஆண்டவர் கோயில், மூக்கரை விநாயகர் கோயில், பத்திரகாளியம்மன் கோயில் உள்பட கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் திரளான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர். 
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் பூமிஸ்வரர் ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சேவா சமிதியினர் மற்றும் மணிகண்ட ஐயப்ப பக்தர்கள் சபாவைச் சேர்ந்தவர்களும் மற்றும் பல்வேறு முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.   அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத ஆலயத்திலும் பக்தர்கள் வழிபட்டு தங்கள் விரத்தை சனிக்கிழமை தொடங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT