முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம்

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:36 AM
பகிர்:

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இக் கல்லூரியின் மகளிர் கழகம், பெண்கள் தேசிய கமிஷன் ஆகியவை இணைந்து நடத்திய இக் கூட்டத்துக்கு கல்லூரி முதல்வர் சு.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர்,  செல்வி மைக்கேல் போர்ஜியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு,  மகளிருக்கான சட்ட உரிமையை  தொடர்ந்து,  இம்மாதம் 4ஆம் தேதி இக்கல்லூரியில் நடைபெற்ற பெண்களுக்கு சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் தேசியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  கல்லூரியின் 3ஆம் ஆண்டு கணிதவியல் மாணவி கிரகலட்சுமி முதலிடமும்,  முதலாம் ஆண்டு பயிலும் முதுகலை கணிதவியல் மாணவி அகிலாண்டேஸ்வரி 2ஆம் இடமும் மற்றும் 3ஆவது பரிசை 5 மாணவிகளும் பெற்றனர்.  வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலா முறையே ரூ. 2 ஆயிரம்,  ரூ.1,500, ரூ.ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  ஏற்பாடுகளை மகளிர் கழக ஒருங்கிணைப்பாளர் கோமதி சங்கரேஸ்வரி,  மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.